பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நீங்கள் இரு சக்கர வாகனப் பழுது பார்ப்பவர்களா?

 

வாகனப் பழுது பார்ப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளும் கவனிக்க வேண்டிய, சின்ன சின்ன விஷயங்கள்.

 

வாகனப் பழுது பார்ப்பவர்களே, நீங்கள் கொஞ்சம் அனுபவம் பெற்றாலே வேலைகளுக்கு சின்னச் சின்ன அனுபவம் உள்ள ஆட்களை வேலக்கு போட்டுவிடுகிறீர்கள். அவர்கள் வேலையை எப்படிச் செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் வண்டிக்கு அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

 

நான் ஆயில் மாற்றுவதற்கு வண்டியைக் கொண்டு போய் விட்டுவிட்டு பக்கத்தில் நிழலுள்ள இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்திற்குப் பின் அவர் ஆயிலை மாற்றினார். பின் பெட்ரோல் மெயின் ரிசர்வ் மாற்றும் இண்டிக்கேட்டரை சரியாக மாட்டாமல், இன்டிகேட்டரை அடைக்க மட்டுமே முடியும் என்பதுபோல் மாட்டிவிட்டார்.

 

நான் தெரியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் போனதும், வண்டி இலுத்து இலுத்து நின்று கொண்டது. நானோ ஆயில் மாற்றியதால் கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருக்கும், போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்து போய்க்கொண்டே இருந்தேன். பின் இரண்டு மூன்று முறை நின்று விட்டது. பின் திரும்பி வந்து, வண்டியை உருட்டிக்கொண்டு, நடந்து வந்து மீண்டும் பழுது பார்க்கும் கடையில் காண்பித்தேன்.

 

பெட்ரோல் இன்டிகேட்டர் பாதி தான் திரும்புகிறது. வண்டி இலுத்து இலுத்து நின்று விடுகிறது என்று சொன்னதும், கடைக்காரரோ வேறொன்றும் இல்லை இன்டிகேட்டரை திருப்பி மாட்டிவிட்டார், அவ்வளவுதான் என்று சொல்லி உடனே சரி செய்துவிட்டார்.

 

நான் அங்கேயே கவனித்திருந்தால் இந்த இழப்பு எனக்கு ஏற்பட்டிருக்காது. கடைகாரரும் வண்டியை பழுது பார்த்த பின், ஒரு கிலோ மீட்டரோ அல்லது இரண்டு கிலோ மீட்டரோ வண்டியை எடுத்து ஓட்டிப்பார்த்திருந்தால் இந்த தவறே வந்திருக்காது.

 

வண்டியைப் பழுது பார்ப்பவர்களே கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நீங்கள் வண்டியை ஓட்டிப் பார்த்த பின் வாகன ஓட்டிகளிடம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் இரு சக்கர வாகனப் பழுது பார்ப்பவர்களா?

  வாகனப் பழுது பார்ப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளும் கவனிக்க வேண்டிய, சின்ன சின்ன விஷயங்கள்.   வாகனப் பழுது பார்ப்பவர்களே, நீங்கள் கொஞ்சம...